முடிவிலிக்கு வரவேற்கிறோம்
முடிவிலி சிறுவர்களுக்கான மெய்நிகர் தமிழ் புத்தகக்கடை. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் வருங்கால சந்ததியினருக்கான ஒரு தொடர்புப் பாலமாக அமைய வேண்டும் எனும் நோக்கத்துடன் தொடங்கப்பட்து. வண்ணமயமான ஊடாடு கதைகள் மூலம் எமது அடையாளத்தையும் மொழியையும் இளையோர்களுக்கு கடத்திச் செல்வது எமது நோக்கமாகும்.
-
எங்கள் பார்வை
தமிழில் முடிவிலி என்ற சொல்லுக்கு முடிவு இல்லாத ஒன்று என்று பொருள், அது போல தான் தமிழ் மொழியின் ஆழமும், செழுமையும், அழகும் முடிவு அற்றது. தமிழ் மீதான இந்த ஈர்பை வளர்பதும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் எங்களுடைய இந்த பயணத்தின் நோக்கமாகும்.
-
எங்கள் பணி
தமிழ் மொழி மற்றும் அடையாளத்தை பேணி, அஞ்சல் ஓட்டதி்ல் போல் வருங்கால சந்ததியினருக்குக் கொடுப்பது எங்களின் பணி.
-
எங்கள் நோக்கம்
தமிழின் செழுமையையும் தொன்மையையும் வருங்கால சந்ததியினருக்குக் கடத்தி, குழந்தைகளுக்கு அவர்களின் மொழியை ஆராயவும், ரசிக்கவும், அவர்களின் சொத்தாக உணரவும் வாய்ப்பளிப்பது எங்களின் நோக்கம். அதோடு புலம் பெயர் நாடுகளில் தமிழ் மொழியின் வரலாறையும் எமது மக்களின் அடையாளத்தையும் பேணுவதும் எமது நோக்கம்.